காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், கடற்கரை வடபகுதியில் தொழுமிடம் அமைப்புப் பணிக்கான துவக்க நிகழ்ச்சி நேற்று (17.03.2017. வெள்ளிக்கிழமை) 17.30 மணியளவில், அதன் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தியதோடு – அறிமுகவுரையாற்றினார்.
அப்பகுதியில் தொழுமிடம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து - காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அப்பகுதியில் நிலவி வரும் சர்ச்சை தொடர்பாக அரசின் நடவடிக்கை நியாயமாக அமையும் என்ற நல்லெண்ணத்தில் - ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி புதிய தொழுமிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.
ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நன்றி கூறினார். இதில் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றபட்டு, அத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் - முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதம்:-
இன்று மாலையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் - வருவாய் வட்டாட்சியர் தலைமையில் – இச்சர்ச்சையில் தொடர்புடைய இரு சாராரும் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர். இதில் அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து இதுவரை தகவல் எதுவும் பெறப்படவில்லை.
தகவல்:
P.M.A.ஸதக்கத்துல்லாஹ் |