காயல்பட்டினம் கடற்கரையோரம் சட்டத்திற்குப் புறம்பாக குருசடி கட்டப்பட்டு வருவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் மாநில வருவாய்த்துறை செயலர் ஆகியோரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில், கடற்கரைப் பூங்காவிற்கு வடக்கே - கிறிஸ்துவ வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
அரசு நிலத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியின் அனுமதி பெறப்படாமல் நடைபெற்று வரும் இக்கட்டுமானங்கள் தொடர்பாக - முழு விபரங்கள், தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு, தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் IAS, உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி IAS, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலர் முஹம்மத் நஸீமுத்தீன் IAS, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்ய மிஸ்ரா IAS, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் IPS, நகராட்சி ஆணையர், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரிடம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக - மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் (MOEFCC) அமைச்சகத்தின் செயலர் திரு அஜய் நாராயண் ஜா IAS இடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - தற்போது மனு வழங்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கை மனுவில் - எவ்வாறு இக்கட்டுமானங்கள், CRZ NOTIFICATION 2011 விதிமுறைகள் தடைசெய்துள்ள Low Tide Line (LTL) மற்றும் High Tide Line (HTL) பகுதிகளுக்கு இடையில், நடைபெறுகின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது.
மேலும் - இது சம்பந்தமான மனு மாநில வருவாய்த்துறை செயலர் பி.சந்திரமோஹன் IAS இடமும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் - அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, சட்டத்திற்கு புறம்பாகவும், நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமலும் - இந்த கட்டுமானங்கள் நடைபெற்றுவருவது விளக்கப்பட்டுள்ளது. மேலும் - இது சம்பந்தமாக, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் இதுவரை துரிதமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
|