பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்திருந்து, பின்னர் துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொலைபேசி இணைப்பை நிறுவல் கட்டணம் (installation charge) இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என்றும்,
தரைவழி தொலைபேசி இணைப்பு மூலம் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து நெட்வர்க்குகளின் மொபைல்கள் மற்றும் தரைவழித் தொலைபேசி இணைப்புகளுக்கும் - அன்றாடம் 21.00 மணி முதல் மறுநாள் 07.00 மணி வரை முற்றிலும் இலவசமாகப் பேசிக்கொள்ளலாம் என்றும்,
இன்னும் சில சலுகைகளையும் விளக்கி – அந்நிறுவனத்தால் நடத்தப்படும் சிறப்பு மேளாவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி மறு இணைப்பு மேளா, இன்று காயல்பட்டினம் தொலைபேசி நிலைய வெளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் தொலைபேசி நிலைய அதிகாரிகளும், அலுவலர்களும் ஒருங்கிணைத்த இம்முகாம் மூலம், ஏற்கனவே தரைவழி தொலைபேசி இணைப்பைத் துண்டித்தவர்களுக்கு மீண்டும் இணைப்பு, ப்ராட்பேண்ட் இணைப்பு, சிம் கார்ட் என 38 பேர் பயன் பெற்றுள்ளனர். வாடிக்கையாளர்களின் நிலுவைத் தொகை வகையில், 20 ஆயிரத்து 877 ரூபாய் இம்முகாம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தங்க லிங்கம்
துணைப் பொறியாளர்
காயல்பட்டினம் தொலைபேசி நிலையம்
|