மியான்மர் (பர்மா) நாட்டிலுள்ள ரோஹிங்யா நகரில், பவுத்தர்களால் முஸ்லிம்கள் கூட்டங்கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், அதைத் தடுக்க முன்வராத மியான்மர் அரசைக் கண்டித்தும், இதனைக் கண்டிக்க இந்திய அரசை வலியுறுத்தியும் – மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (மஜக) சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நேற்று 16.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் கே.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் உலவீ, தெற்கு மாவட்டச் செயலாளர் ஜாஹிர் ஹுஸைன், நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை அப்துல் வாஹித், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மத் நஜீப், தெற்கு மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராஸிக் முஸ்ஸம்மில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீரா சாகிப், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் செய்யதுஅலி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜா முகம்மது,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் அபுல் ஹசன் கலாமி, SDPI கட்சியின் நகர நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியின் நகர நிர்வாகிகள், மஜக காயல்பட்டினம் நகர நிர்வாகிகள், ஆத்தூர் நகர நிர்வாகிகள், மஜக ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு, கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
தகவல் & படங்கள்:
நஜீப்
|