அண்மையில் நடைபெற்ற இருவேறு கலை-இலக்கியப் போட்டிகளில் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளனர். இது குறித்து, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் துணை செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை கீழ் வருமாறு:
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!
கலை-இலக்கியத் துறை மீதான ஆர்வத்தை மாணவ-மாணவிகளுக்கு வளர்த்திடும் முயற்சிகளில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மேனிலைப் பள்ளி தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.
அவ்வகையில், அண்மையில் நடைபெற்ற இருவேறு கலை-இலக்கியப் போட்டிகளில், எம் பள்ளியின் மாணவச் செல்வங்கள் பங்கேற்று, சிறப்பான முறையில் பரிசுகளைப் பெற்று திரும்பியுள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்வு #1
பேரறிஞர் அண்ணா அவர்களின் 109ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில், எம் பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளனர்.
12-ஆம் வகுப்பு பயிலும் M.M. செய்யது அஜீபா ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசாக ரூ 5000 பெற்று மாநில அளவில் நடக்கவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றார்.
K.M.S. அகமது மர்ஸூகா, M.O. ஜீனத்துல் பிர்தௌஸ் & முஹம்மது சம்சுதீன் ஆகியோர் கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசாக தலா ரூ 1000 பெற்றுள்ளனர்.
நிகழ்வு #2
திருச்செந்தூர் இந்து துவக்க பள்ளியில் 12.11.2017 அன்று திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. அதில், எம் பள்ளி மாணவர்கள் பலர் பங்கு பெற்றனர்.
முதலாம் வகுப்பு பயிலும் மாணவி மைமூன் மலாஹிரா முதல் பரிசும், இரண்டாவது வகுப்பு பயிலும் மாணவிகள் பாத்திமா இப்ரா & சுமைய்யா ஆகியோர் இரண்டாவது பரிசும் பெற்றனர். பங்குபெற்ற ஏனைய மாணவர்கள் ஆறுதல் பரிசு பெற்றுள்ளனர்.
இருவேறு போட்டிகளிலும் பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் & மாணவர்கள் பாராட்டினர்.
ஜன. 4 & 5-இல் கலை-இலக்கியப் போட்டிகள் & அறிவியல் கண்காட்சி
வருகின்ற 04.01.2018 & 05.01.2018 ஆகிய இரு நாட்களில் (இன்ஷா அல்லாஹ்), மாணவர்களுக்கான கலை-இலக்கியப் போட்டிகள் & அறிவியல் கண்காட்சி ஆகியன எம் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்க வட்டார பள்ளி மாணவர்களை அன்போடு அழைக்கிறோம். இது குறித்த தகவலறிக்கையை காண கீழுள்ள வலைப்பக்கத்தை சொடுக்குக: http://www.kayalpatnam.com/shownews.asp?id=20038.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தகவல் & ஒளிப்படம்:
கே.எம்.டீ.சுலைமான்
|