காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை நினைவூட்டியும் பயோகேஸ் திட்டத்தை இயக்க இன்று வரை நகராட்சி விண்ணப்பிக்கவில்லை!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 29ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பாகம் 28 இல் நாம் கண்டது போல் - சர்வே எண் 278/1B (காயல்பட்டினம் தென் பாக கிராமம்) இடத்தில் குப்பைகொட்டவும், பயோ காஸ் திட்டம் அமைக்கவும் - மே 21, 2015 முதல் ஜனவரி 25, 2016 வரை (ஆக மொத்தம் 249 நாட்கள்), பால் ரோஸ் மற்றும் செந்தமிழ்செல்வன் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் தொடர்ந்த வழக்கு [Application No.100/2015] காரணமாக தடை நீடித்தது.
அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி - இரு ஆண்டுகள் ஏறத்தாழ ஆகியும் - ஏன் பயோ காஸ் திட்டம் - இன்றைய தேதி வரை - துவக்கப்படவில்லை மற்றும் ஏன் அங்கு இன்னும் - இன்றைய தேதி வரை - குப்பைகொட்டப்படவில்லை என்பது குறித்து பல்வேறு தவறான தகவல்களும், அவதூறுகளும் நகரில் - ஒரு சிலரால் - பரப்பப்படுகிறது. அவைகள் குறித்த விளக்கங்களை - நாம் தொடரும் இரு பாகங்களில் - காணலாம்.
நாம் முந்தைய பாகங்களில் கண்டது போல் - பயோ காஸ் திட்டப்பணிகளை மேற்கொள்ள, CONSENT TO ESTABLISH (CTE) என்ற அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 24-6-2015 அன்று - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியிருந்தது. அந்த அனுமதி 21-6-2017 தேதி வரை - செல்லத்தக்கது. அந்த தேதிக்குள், பணிகளை நிறைவுசெய்யவில்லை என்றால், அனுமதியினை நீட்டித்த பிறகே (EXTENSION) - பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
மேலும் - கட்டுமான பணிகளை, அந்த தேதிக்குள், நிறைவு செய்திருந்தால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுமான அனுமதியுடன் (CTE), விதித்திருந்த நிபந்தனைகளை கடைபிடித்து, பணிகளை நிறைவு செய்த தகவலை இணைத்து, பயோ காஸ் திட்டத்தை இயக்க (CONSENT TO OPERATE - CTO), மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோர வேண்டும்.
பணிகள் துவக்கி - ஏறத்தாழ 2.5 ஆண்டுகள் ஆகிவிட்டது.
தீர்ப்பாய தடை நீங்கி - ஏறத்தாழ - 2 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனைகளை - காயல்பட்டினம் நகராட்சி பூர்த்தி செய்தததா? இந்த கேள்விக்கான பதிலை - காயல்பட்டினம் நகராட்சி, - இன்றைய தேதி வரை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமோ, பொதுமக்களிடமோ தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு, செப்டம்பர் 27 அன்று (27-9-2016) - மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சிக்கு - ஒரு கடிதம் எழுதியது. அதில் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் CTO என்ற அனுமதி பெறப்படாமல், பரிசோதனை ஓட்டம் (TRIAL RUN) மேற்கொள்ளப்படுவதாக கூறி, CTO என்ற அனுமதிபெற்ற பின்பே, பயோ காஸ் திட்டப்பணிகளை செயலுக்கு கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதத்திற்கு - 7.11.2016 தேதிய கடிதம் மூலம், மாசு கட்டுப்பட்டு வாரியத்திற்கு பதில் வழங்கிய, திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் (RDMA) திருமதி இரா.பூங்கொடி அருமைக்கண், 25.2.2016 அன்றே, மின்னணு மூலமாக - காயல்பட்டினம் நகராட்சி - CTO அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் - ஏற்கனவே விண்ணப்பம் செய்துவிட்டதாக நகராட்சி கூறிய தகவலை மறுக்கும் விதமாக, மாசு கட்டுப்பட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சிக்கு - 21-11-2016 அன்று ஒரு கடிதம் எழுதுகிறது. அதில் - www.tnpcbocmms.com என்ற இணையதளம் வாயிலாக, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை - மேலும் காலதாமதம் செய்யாமல், CTO அனுமதி பெற, விண்ணப்பித்திட அறிவுரை வழங்கவும் - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"... I request to inform that necessary instruction may be issued to the Commissioner, Kayalpattinam Municipality to file application through online in the website of www.tnpcbocmms.com for consent to operate with relevant particulars without further delay..." [LETTER NO.DEE/TTN/BMP/2016 dated 21-11-2016]
இந்த கடிதம் - நகராட்சி நிர்வாகம் மண்டல இயக்குனருக்கு அனுப்பப்பட்டு, ஓர் ஆண்டிற்கு மேலாகியும், இன்றைய தேதி வரை - காயல்பட்டினம் நகராட்சி, அதற்கான விண்ணப்பத்தை - தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பிக்கவில்லை.
இதற்கிடையில் - மூன்று மாதங்களுக்கு முன்பு, 14-9-2017 அன்று - சர்வே எண் 278/1B இடத்தை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய உயரதிகாரிகள், பயோ காஸ் திட்டப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட ஒரு விதியான, போதிய காலியிடம் (BUFFER ZONE) ஒதுக்கப்படவேண்டும் என்ற நிபந்தனை - காயல்பட்டினம் நகராட்சியால் நிறைவேற்றப்படவில்லை என்றும், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள CTE - Extension என்ற அனுமதி பெறவேண்டும் என்றும் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.
"... during inspection on 14-09-2017, the unit was not in operation. It was reported by the Commissioner, Kayalpattinam Municipality, that the unit was not put into regular commissioning past one year ... the unit has been advised to apply for CTE Extension (and) to operate the unit after obtaining CTO... the unit was not having sufficient place to provide adequate buffer zone area..." [Note on M/s Kayalpattinam Municipality 5 TPD Capacity Bio-methanation-cum-power generation plant, located in S.F.No.278/1B, Kayalpattinam South, Tiruchendur Taluk, Thoothukudi District; TNPCB]
இது தான் - பயோகாஸ் திட்டத்தின் இன்றைய தேதி நிலை.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 27, 2017; 7:30 pm]
[#NEPR/2017122701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |