காயல்பட்டினம் நகராட்சி உட்பட, தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சிகளில் வார்டுகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீதான கருத்துக்களைக் கேட்டறிவதற்காக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம், மாவட்ட மறு வரையறை அலுவலரும் - மாவட்ட ஆட்சியருமான என்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்கு முறை சட்டம் 23/2017-ன் படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாகச் கொண்டு தயார் செய்யப்பட்ட கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 27.12.2017-ம் தேதியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 29.12.2017-ம்; தேதி அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்த்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநா; திரு.வே.பிச்சை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.அ.லெட்சுமணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.க.பழனி, மாவட்ட ஊராட்சி செயலர் திரு.பத்ஹூ முகம்மது நசீர், சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையா;கள் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா; மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் திரு.சி.த.செல்லப்பாண்டியன் அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர், திருமதி.பி.கீதாஜூவன்,எம்.எல்.ஏ., தி.மு.க., திரு.கணேசன் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர், திரு.ஏ.சந்தானம் அ.இ.அ.தி.மு.க, திரு.டி.சேகர் அ.இ.தே.காங்கிரஸ், திரு.டி.ராஜா சி.பி.ஜ (மா), திருசிவராமன், பா.ஜ.க., திரு.அய்யாத்துரை பகுஜன்சமாஜ், திரு.செந்தில்குமார் தே.மு.தி.க., திரு.எம்.பரமசிவன் சி.பி.ஜ, திரு.பொன்ராஜ் தேசியவாத.காங்கிரஸ் கட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வரைவு மறுவரையின் மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்து பூர்வமாக சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சி செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 02.01.2018 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம்.
மேலும், மறுவரையறை வரைவு கருத்துருக்கள் மீது பொது மக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் தெரிவிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்பு அலுவலர்களின் அலைபேசி எண்கள்:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) – 9443861510
வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) – 9486833045
உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – 8883100140
மாநகராட்சி, தூத்துக்குடி
1. 94880 72537 - மண்டலம் 1
2. 97904 44827 - மண்டலம் 2
3. 94891 22759 - மண்டலம் 3
4. 94435 27347 - மண்டலம் 4
கோவில்பட்டி நகராட்சி – 94434 60448
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|