காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தால், United Football League (UFL) எனும் தலைப்பில், ஆண்டுதோறும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக இப்போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு United Super Cup கோப்பைக்கான ஜூனியர் பிரிவு United Football League (UFL) கால்பந்துப் போட்டிகள், 2017 டிசம்பர் 24 துவங்கி, 31ஆம் நாள் வரை நடைபெற்றுள்ளது.
7ஆம் நாள் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் குறித்து, போட்டி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் நடத்தும் 5ஆம் ஆண்டு "United Super Cup கோப்பைக்கான" United Football League கால்பந்து போட்டிகள் கடந்த 24/12/2017 அன்று முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்றைய தினம் லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் இன்று (30/12/2017) காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
காலிறுதிப் போட்டி முடிவுகள்:
30.12.2017 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், லீக் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்ற Celtic FC அணியும், நான்காம் இடத்தை பெற்ற Kayal Manchester அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Manchester அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அன்று மாலை நடைபெறும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அரையிறுதிப் போட்டி முடிவுகள்:
அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், லீக் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த Hardy Boys அணியும், காலிறுதியில் வெற்றி பெற்ற Kayal Manchester அணியும் விளையாடின. 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவுற்ற இப்போட்டியில், Tie-Breaker முறையில் Kayal Manchester அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மறுநாள் நடைபெறும் இறுதிப் போட்டியில், லீக் போட்டியில் முதலிடம் பெற்ற Gallery Birds அணியுடன் விளையாடுகின்றனர்.
சிறந்த வீரருக்கான பரிசுகள்:
அன்றைய தினம் காலை நடைபெற்ற போட்டியில் Celtic FC அணியின் வீரர் இப்ராஹீம், மாலை நடைபெற்ற போட்டியில் Kayal Manchester அணியின் இம்ரான், ஆகியோர் சிறந்த வீரருக்கான பரிசுகளை பெற்றனர். இப்பரிசுகளுக்கான அனுசரனையை RD13 நிறுவனத்தினர்கள் வழங்குகிறார்கள்.
இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் படி, அணிகள் பெற்றுள்ள புள்ளிகள் பட்டியல்:-
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
‘கோடாக்கா’ ஃபைஸல்
|