இந்தியாவிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டப் படி அனுமதிக்கப்பட்டுள்ள முத்தலாக் – விவாகரத்து முறையைத் தடை செய்யும் – முத்தலாக் தடை சட்ட மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில் இன்று வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 17.00 மணியளவில் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைத் தலைவர் எஸ்.எம்.தாஜுத்தீன் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகர கிளை தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, திருவள்ளூர் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் காயல் அஹ்மத் ஸாலிஹ், ஐக்கியப் பேரவை செயலாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
நகரப் பிரமுகர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், எஸ்.டி.பீ.ஐ. தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மவ்லவீ அஷ்ரஃப் அலீ ஃபைஜீ, தமுமுக நகர நிர்வாகி எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், அதிமுக ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நகர துணைத் தலைவர் முஸ்தஃபா கமால், நகரப் பிரமுகர் எஸ்.ஏ.ஜமால், பாலப்பா அப்துல் காதிர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கண்டனப் பேருரையாற்றினார்.
இவ்வார்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு - முத்தலாக் தடைச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஏதேச்சாதிகாரமாக நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(தூ-டி. மாவட்ட செய்தி தொடர்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக்.) |