காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் நேரில் சந்தித்து, இதுவரை கோரப்பட்டுள்ள நகர்நலத் திட்டப் பணிகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகர் முன் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நகராட்சி ஆணையரை - நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் - 30.12.2017. அன்று சந்தத்தனர்.
இந்த சந்திப்பின் போது -
// புதிய வார்டுகள் வரையறை
// திடக்கழிவு
// சாலைகள்
// தெரு விளக்குகள்
// அரசு மருத்துவமனை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நாய்கள் தொல்லை
// சி.சி.டி.வி. கேமரா
உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நடப்பது என்ன? குழுமத்தின் கோரிக்கைகளுக்கு கீழ்க்காணும் விளக்கங்களை ஆணையர் திரு பொன்னம்பலம் வழங்கினார்:
புதிய வார்டு வரைமுறை விபரங்கள் பொது மக்களின் கருத்துகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபணைகள் தெரிவிக்க டிசம்பர் 29 இல் இருந்து ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
குப்பைகளை - மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்க பொது மக்கள், பொது நல அமைப்புகளின் ஒத்துழைப்பு வேண்டும்
ஒரு வழிப்பாதை உட்பட பல்வேறு சாலை பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளது
இன்னும் சில சாலைகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது
குளிர் காலத்தை கருத்தில் கொண்டு - தெருவிளக்குகளை கால தாமாதமாக அணைக்க தெரிவிக்கப்படும்
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது; தெருவில் சுற்றாமல், வேறு இடங்களுக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்படும்
சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்தும் பணி நிறைவு கட்டத்தில் உள்ளது
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 31, 2017; 11:30 am]
[#NEPR/2017123101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|