காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தால், United Football League (UFL) எனும் தலைப்பில், ஆண்டுதோறும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக இப்போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு United Super Cup கோப்பைக்கான ஜூனியர் பிரிவு United Football League (UFL) கால்பந்துப் போட்டிகள், 2017 டிசம்பர் 24 துவங்கி, 31ஆம் நாள் வரை நடைபெற்றுள்ளது. இறுதிப் போட்டியில், Gallery Birds அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையைத் தக்க வைத்துள்ளது.
இது குறித்து, போட்டி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் நடத்தும் 5ஆம் ஆண்டு "United Super Cup கோப்பைக்கான" United Football League ஜூனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் கடந்த 24/12/2017 அன்று துவங்கி, 31/12/2017 அன்று இறுதிப்போட்டியுடன் நிறைவுற்றது.
இறுதிப் போட்டி:
31/12/2017 அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், Gallery Birds அணியும், Kayal Manchester அணியும் மோதின. இதில், 2 - 1 என்ற கோல் கணக்கில் Gallery Birds அணி வெற்றிபெற்றது. அவ்வணியின் ஸாலிஹ், முஸ்தாக் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
சிறப்பு விருந்தினர்:
இப்போட்டியில், சமூக ஆர்வலர் ஜனாப் A.S. ஜமால் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டதோடு, ஆட்ட இடைவேளையின்போது ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நடுவர்கள்:
போட்டிகள் அனைத்திலும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான ஜமால், இஸ்மாஈல் மற்றும் ஃபயாஜ் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
பரிசளிப்பு விழா:
ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் அப்துல் காதர் நெய்னா அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ். முஹம்மது அலி இறைமறை குர்ஆன் வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள், சுற்றுப் போட்டிக் குழுவினர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிக்கு 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு 3 ஆயிரம் ரூபாயும், காலிறுதி மற்றும் அரையிறுதி வரை முன்னேறிய இரு அணிகளுக்கு தலா ஆயிரம் ரூபாயும் பணப்பரிசு வழங்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட பரிசுகள்:
>>> Kayal Manchester அணியின் ஷாஹீன், Celtc FC அணியின் அக்மல், Gallery Birds அணியின் அப்துல் ரஹ்மான் மற்றும் ஃபரீத் (கோல் கீப்பர்) ஆகியோருக்கான சிறப்பு பரிசு.
>>> 18 வயதுக்குட்பட்ட வீரர்களுள் வளரும் வீரருக்கான விருது Celtic FC அணியின் இப்ராஹீம்.
>>> Kayal Manchester அணியின் இம்ரான், மொஹ்தூம் நெய்னா, ஃபர்ஹான்; Gallery Birds அணியின் அக்பர் ஷா, வசீம், முஸ்தாக்; Hardy Boys அணியின் முஃபீஸ், செய்யத் இப்ராஹீம், ஹுனைஃப்; FAAMS அணியின் அஃப்சல், தய்ஸீர், ஹபீப் முஹம்மது; Celtic FC அணியின் இம்ரான், அஜ்மல், ஃபயாஜ் அஹ்மத்; BS Contractors அணியின் உஸாமா, வசீம், உஜைர் ஆகியோருக்கு லீக் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான பரிசு.
ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றியறிவிப்பு:
நடப்பாண்டு UFL ஜூனியர் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியமைக்காக, கிதுரு ஃபைசல், ஸதக்கத்துல்லாஹ், எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் மீரா தம்பி, எல்.கே. மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான ஜமால், இஸ்மாஈல் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும், சுற்றுப்போட்டிகளில் பங்கேற்ற அணிகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள், அனுசரணை வழங்கிய Ibra Leathers, Marhaba, Masha Allah Garments, RD13, ZAMF நிறுவனத்தார்கள், போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அன்றாட போட்டி முடிவுகளைச் சமூக ஊடகங்களுக்கும் காயல் இணையதளங்களுக்கும் அனுப்பித் தந்த சகோதரர் தைக்கா சாஹிப் மற்றும் செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
‘கோடாக்கா’ ஃபைஸல் & கிதுரு முஹம்மத் ஃபைஸல்
|