காயல்பட்டினம் நகராட்சி வார்டு மறுவரையறைப் பட்டியல் குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழமம் சார்பில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் ஆட்சேபனைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் மறுவரையறை செய்யப்பட்ட 18 வார்டுகள் விபரம், நகராட்சி ஆணையரால் - டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி வரைவு விபரங்கள் குறித்த ஆட்சேபனைகள் - ஜனவரி 4 க்கு முன்னர் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மறுவரையறை ஆணையம் (DELIMITATION COMMISSION) வெளியிட்டுள்ள கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் (Principles and Criteria for Delimitation of Wards; Duties of Delimitation Authorities) மாற்றமாக - காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு பட்டியல் இருப்பதால், தற்போதைய நிலையில் - அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என விரிவான ஆட்சேபனை கடிதம் இன்று (2-1-2018) காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு ப.பொன்னம்பலத்திடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, அதன் நிர்வாகிகளால் - சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் - மறுவரையறை ஆணையத்தின் தலைவரான, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கும், மாவட்ட மறுவரையறை அதிகாரியான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் - ஆட்சேபனை மனுக்கள் - இன்று பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேபனை கடிதத்தின் முழு விபரம் தனி செய்தியாக பின்னர் வெளியிடப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 2, 2018; 5:30 pm]
[#NEPR/2018010203]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|