காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் - காயல்பட்டினம் முஹ்யித்தீன் தெருவைச் சேர்ந்தவருமான கத்தீபு கே.எச்.செய்யித் அலவீ, 30.12.2017. சனிக்கிழமையன்று ஹாங்காங் நேரப்படி 23.00 மணியளவில், ஹாங்காங்கில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்! இதய ஆறுதலைத் தெரிவிக்கிறோம்!!
எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை, ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி. கத்தீப் ஹெச். செய்யது அலவி அவர்கள் வஃபாத்தாகிவிட்ட செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் எமது பேரவையின் செயல்பாடுகளில் மிகவும் தீவிர பங்காற்றியவர். இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த மரணத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்.
யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளை பொறுத்து, உயரிய சுவனபதியில் அவர்களை அமரச் செய்வாயாக, ஆமீன்.
மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அழகிய பொறுமையையும் அவர்களுக்கு வழங்க இறைவனிடம் மனமுருக பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |