காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, “நடப்பது என்ன?“ சமூக ஊடகக் குழுமம் ஆட்சேபணைக் கடிதங்களை நகராட்சியிடம் வழங்கியுள்ளது. மேலதிகமாக, 18 வார்டுகளின் எல்லைகள் எவ்வாறு அமைய வேண்டும் என - “நடப்பது என்ன?” குழுமம் பரிந்துரைக்கும் – ஆவணங்கள் நகராட்சி ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் மறுவரையறை செய்யப்பட்ட 18 வார்டுகள் விபரம், நகராட்சி ஆணையரால் - டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி வரைவு விபரங்கள் குறித்த ஆட்சேபனைகள் - ஜனவரி 05க்கு முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் – மாவட்ட மறுவரையறை அலுவலரான மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - பல்வேறு குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, ஆட்சேபனை கடிதங்கள் ஜனவரி 2 மற்றும் ஜனவரி 4 தேதிகளில், தலைவர், மறுவரையறை ஆணையம் (தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், சென்னை), மாவட்ட மறுவரையறை அதிகாரி (மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி) மற்றும் வார்டு மறுவரையறை அலுவலர் (ஆணையர், காயல்பட்டினம் நகராட்சி) ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக - வார்டுகள் எல்லைகளை அடையாளம் காண்பதில் நகராட்சி வரைவு ஆவணத்தில் உள்ள குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி இன்று மூன்றாவது ஆட்சேபனை கடிதமும், மேலும் நடப்பது என்ன? குழுமம் பரிந்துரைக்கும் காயல்பட்டினம் நகராட்சி புதிய வார்டுகள் விபரமும் - தனித்தனி மனுக்களாக காயல்பட்டினம் நகராட்சியில் 05.01.2018. அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர் திரு அறிவுட்ச்செல்வன் - 15க்கும் மேற்பட்ட ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு - மண்டலம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
நடப்பது என்ன? குழுமம் சார்பாக அனுப்பப்பட்ட - மூன்றாவது ஆட்சேபனை கடிதத்தின் விபரமும், பரிந்துரைக்கப்பட்டுள்ள வார்டுகள் விபரமும் - தனித்தனி செய்திகளை அடுத்து பதிவு செய்யப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 05, 2018; 6:15 pm]
[#NEPR/2018010501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|