காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)யின் விளையாட்டுத் துறை சார்பில், ஈக்கியப்பா தைக்கா வளாகத்திலுள்ள அதன் மைதானத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் – இறகுப் பந்து உள்ளரங்க மைதானம் கட்டியமைக்க – 31.12.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 19.30 மணியளவில், ஈக்கியப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்ற அதன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு, இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். மைதானத்தின் தேவை, செய்ய வேண்டிய கட்டமைப்புப் பணிகள், அதற்கு ஏற்படும் செலவினம் குறித்து, ‘ஜாஸ்’ பெர்ஃப்யூம்ஸ் ஜெ.ஏ.அப்துல் ஹலீம் விளக்கிப் பேசினார்.
சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், ஏ.எல்.முஹம்மத் நிஜார், எஸ்.கே.ஸாலிஹ், பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், எம்.என்.காமில் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். மவ்லவீ சொளுக்கு எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த – இளைஞர் ஐக்கிய முன்னணியின் விளையாட்டுத் துறை அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்டத்தின் நிறைவில், புதிய மைதானக் கட்டமைப்பிற்காக கனிசமான தொகை பங்கேற்றோர் சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |