காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில், டோக்கன் வழங்க பணம் வசூலிக்கப்படுவது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், ஆதார் மையம் அமைந்துள்ளது. இந்த மையம் செயல்பாடு குறித்து - பொது மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியுள்ளது.
இந்த மையம் முறையான நேரங்களில் செயல்படுவதில்லை.
இந்த மையத்திற்கு வருபவர்கள் - டோக்கன் முடிந்துவிட்டது என அலைக்கழிக்கப்படுகிறார்கள். எவ்வாறு - டோக்கன் வழங்கப்படுகிறது, யாரிடம் முன்பதிவு செய்யவேண்டும் என்று எந்த எந்த தகவலும் பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை; மாறாக - இடைத்தரகர்கள், பணம் பெற்றுக்கொண்டு - ஆதார் மையம் டோக்கன் முறையை நடத்துகிறார்கள்.
இந்த மையத்தில் - தேவையான காகிதங்கள் / படிவங்கள் பராமரிக்கப்படுவதில்லை. மாறாக - இங்கு பதிய வரும், பொது மக்கள் - ஒரு குறிப்பிட்ட கடைக்கு சென்று, காலி காகிதம் உட்பட படிவங்கள் நகல், பணம் செலுத்தி வாங்கி வர நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
கேள்வி கேட்கும் பொது மக்களிடம், கனிவாக பேசாமல் - கடுமையான வார்த்தைகளை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இது சம்பந்தமாக காயல்பட்டினம் நகராட்சியில் புகார் செய்தால் - அலட்சியமான பதிலே அங்கிருந்து வழங்கப்படுகிறது.
எனவே - இது சம்பந்தமாக முறையான நடவடிக்கை எடுக்கும்படி எடுக்கக்கோரி - மாவட்ட ஆட்சியரிடம், 08.01.2018. திங்கட்கிழமையன்று புகார் மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 08, 2018; 6:30 pm]
[#NEPR/2018010804]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|