காயல்பட்டினத்தில் அம்மா சிமெண்ட் சப்ளை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக, காயல்பட்டினம் கிடங்கிற்கு அம்மா சிமெண்ட் விரைவாக வந்து சேர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
வீடு கட்டும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் நோக்கில் - குறைந்த விலையில், அம்மா சிமெண்ட் - தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூபாய் 190 என்ற அடிப்படையில், இத்திட்டம் மூலம் சிமெண்ட் வழங்கப்படுகிறது.
100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதமாக பெற்று, 1500 சதுர அடிவரை வீடுகட்டுவோர், இந்த திட்டம் மூலம் பயனடையலாம்.
வீடு பழுதுபார்க்கவும் - 10 மூட்டைகள் முதல் அதிகபட்சமாக 100 மூட்டைகள் வரை பெறலாம்.
கடந்த சில மாதங்களாக - குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் - காயல்பட்டினம் நகராட்சியில், அம்மா சிமெண்ட் கிடைக்கவில்லை. இது குறித்து விசாரித்தால் - தங்களுக்கு ஸ்டாக் வரவில்லை என்ற பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டு வந்தது.
இது குறித்து திங்களன்று (ஜனவரி 8), நடப்பது என்ன? குழுமம் சார்பாக - மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - இன்று (ஜனவரி 10), காயல்பட்டினம் திருவள்ளுவர் தெருவில் உள்ள அம்மா சிமெண்ட் கிடங்குக்கு, ஸ்டாக் வந்துள்ளதாக - அந்த கிடங்கின் நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 10, 2018; 2:00 pm]
[#NEPR/2018011001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|