‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பொங்கல் மலர் 2018’ இதழில் எழுத்தாளார் சாளை பஷீரின் கட்டுரை வெளியாகியுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
பொங்கல் மலர் 2018
2018-ஆம் ஆண்டின் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பொங்கல் மலர் தற்போது வெளியாகி உள்ளது. அனைத்துத் தரப்பு வாசகர்களையும் மகிழ்விக்கும் வகையிலும் ரசனையை மேம்படுத்தும் வகையிலும், பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள் & கதைகளுடன் இந்த பொங்கல் மலர் 2018 வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நாளிதழ் தெரிவித்துள்ளது. இது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளியிடும் ஐந்தாம் ஆண்டின் பொங்கல் மலர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை
இந்த பொங்கல் மலரில், காயல்பட்டினம்.காம் எழுத்து மேடை கட்டுரையாளரும் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சாளை பஷீர் ஆரிஃப் எழுதிய “வாழ்க்கைதான் செல்வம்" எனும் கட்டுரை வெளியாகி உள்ளது.
‘வாழ்வு இனிது’ எனும் பகுதியில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரை, காந்திய பொருளாதார நிபுணர் ஜே.சி.குமரப்பாவின் வாழ்வியல் சிந்தனைகளை விளக்குகிறது.
காந்தியை மிஞ்சிய காந்தி
ஜே.சி.குமரப்பா கி.பி. 1892 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார். லண்டனில் கணக்கியலாளராக பணியாற்றியவர். காந்தியின் அன்றாட வாழ்க்கையின் ஒரு துளியில் ஈர்க்கப்பட்டு, கை நிறைய ஊதியமும் ஆடம்பரமும் நிறைந்த வாழ்க்கையை விட்டு வெளியேறி, முழுமையான காந்திய பொருளியலாளரானார்.
“நிலைத்த பொருளாதாரம்” நூலாய்வு நிகழ்வு
எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & வாசகர் வட்டம் - காயல்பட்டினம் அரசு பொது நூலகம் இணைவில் ஜே.சி.குமரப்பாவின் புகழ்பெற்ற “நிலைத்த பொருளாதாரம்” (Economy of Permanence) புத்தகத்தின் நூலாய்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அதில், மூத்த எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் துணை ஆசிரியருமான களந்தை பீர் முஹம்மது கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொங்கல் மலரை வாங்கிட…
சாளை பஷீர் ஆரிஃபின் கட்டுரை வெளியாகியுள்ள பொங்கல் மலரை இணையத்தில் வாங்கிட கீழுள்ள வலைப்பக்கத்தை சொடுக்குக:
https://pay.hindu.com/bookspay/Subscription
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1> “நிலைத்த பொருளாதாரம்” நூலாய்வு & காந்தி குறித்த ஏ.கே.செட்டியாரின் உழைப்பில் வெளியான அரிய ஆவணப்படம் திரையிடல்!!
http://kayalpatnam.com/shownews.asp?id=20100
2> சாம்பல் மலர் – மதுரையில் நடந்த “நிலைத்த பொருளாதாரம்” நூல் அறிமுக நிகழ்ச்சி & அதனையொட்டிய பயணம் (தே.கல்லுப்பட்டியில் அமைந்திருக்கும் காந்தி ஆசிரமம்) ஆகியன குறித்த சாளை பஷீர் ஆரிஃபின் எழுத்து மேடை கட்டுரை!!
http://www.kayalpatnam.com/columns.asp?id=203
|