காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் பொருளாளர் ‘ஃபுட் சிட்டி’ மவ்லவீ பீ.எம்.ஆர்.எஸ்.இஸ்மாஈல் மஹ்ழரீயின் தாயார் – பஞ்சாயத் வீதி எம்.கே.டீ. நகரைச் சேர்ந்த பிச்சம்மா ராத்தா என்ற ஸிராஜுத்தீன் ஃபாத்திமா, நேற்று (16.01.2018. செவ்வாய்க்கிழமை) 16.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 91. அன்னார்,
மர்ஹூம் கண்டி ஷேக் அப்துல் காதிர் அவர்களின் மகளும்,
மர்ஹூம் பீ.எம்.கே.முஹம்மத் மீரா ஸாஹிப் அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் எம்.கே.எம்.முஹம்மத் ஸுலைமான் லெப்பை அவர்களின் மாமியாரும்,
துபை காயல் நல மன்ற செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், நோனா உவைஸ்னா லெப்பை, எஸ்.ஐ.எஸ்.ஜக்கரிய்யா மவ்லானா, எம்.எஸ்.எல்.நுஃமான், எம்.எஸ்.எல்.ஃபஸ்லுர்ரஹ்மான், எம்.எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.எம்.மஹ்பூப் ஸுப்ஹானீ ஆகியோரின் கம்மாவும்,
பீ.எம்.ஐ.முஹம்மத் மீரா ஸாஹிப் நிப்ராஸ், பீ.எம்.ஐ.அப்துர்ராஸிக், பீ.எம்.ஐ.முஹம்மத் அப்துல்லாஹ், பீ.எம்.ஐ.முஹம்மத் வஸீம் ஆகியோரின் தந்தையின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று (17.01.2018. புதன்கிழமை) 10.00 மணியளவில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, பிறகு பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. |