காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலைத் தெருவில் சாலை, மின் விளக்கு வசதிகளைச் செய்து தரக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் மரைக்கார்பள்ளி தெரு - மாட்டுக்குளம் அருகே உள்ளது தேங்காபண்டகசாலை. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த சாலை பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் உள்ளது. இது சம்பந்தமாக பல முறை - அப்பகுதி மக்கள் முறையீடு செய்தும், இது காலம் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் - மழைக்காலங்களில் நீர் தேங்கி, சுகாதார கேடுகள் நிகழ்கின்றன. மேலும் - வாகனங்கள் போக்குவரத்திற்கு முற்றிலும் தகுதியற்ற சாலையாக அது விளங்குகிறது.
இந்த பகுதிகளில் - தெருவிளக்குகளும் இல்லை; இப்பகுதிக்கு அருகாமையில் உள்ள தெருவிளக்குகளும் எரிவதில்லை. இதனால் - கடலோரத்திற்கு அருகில் உள்ள இந்த பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
எனவே - இப்பகுதிக்கு உடனடியாக, சாலை வசதியும், தெரு விளக்குகள் வசதியும் ஏற்படுத்தி கொடுக்க கோரி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலத்திடம் - நேற்று (ஜனவரி 12), நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 13, 2018; 7:30 am]
[#NEPR/2018011301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|