அகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட – ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டத்தில், திரளானோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
அகில இந்திய இமாம் கவுன்சில் (All India Imams Council) சார்பில், ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 14.01.2018. ஞாயிற்றுக்கிழமை 17.00 மணி முதல் 21.30 மணி வரை நடைபெற்றது.
மவ்லவீ முனைவர் ஏ.ஆஃபிருத்தீன் மன்பஈ தலைமை தாங்கினார். மவ்லவீ எம்.அஹ்மத் ஃபைஸல் மக்தூமீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மவ்லவீ ஜெ.முஹம்மத் இப்றாஹீம் மிஸ்பாஹீ வரவேற்றார். மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, என்.ஏ.தைமிய்யா, மவ்லவீ எம்.எஸ்.ஷம்சுல் இக்பால் தாவூதீ, எம்.முஹம்மத் இஸ்மாஈல், மவ்லவீ ஏ.ஷவ்கத் அலீ உஸ்மானீ ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மவ்லவீ கே.அர்ஷத் அஹ்மத் அல்தாஃபீ நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இதில், காயல்பட்டினத்திலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் திரளானோர் பங்கேற்றனர். மகளிருக்குத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
|