காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய விளையாட்டு சங்க (USC) முன்னாள் செயலரும் – கே.டீ.எம். தெருவைச் சேர்ந்தவருமான சாவன்னா ஹாஜி என்ற ஷாஹுல் ஹமீத், இன்று 14.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 90. அன்னார்,
மர்ஹூம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மகனும்,
மர்ஹூம் செய்யித் இப்றாஹீம் அவர்களின் மருமகனாரும்,
எஸ்.எச்.அப்துல் காதிர், எஸ்.எச்.அப்துர்ரஊஃப், எஸ்.எச்.முஹம்மத் அன்வர் (JJ), எஸ்.எச். முபாரக் ராஸிக் ஆகியோரின் தந்தையும்,
ஹமீத் இர்ஷாத், ஹமீத் ஷாஹிர், ஹமீத் ஸுலைமான், முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, 24.01.2018. புதன்கிழமையன்று 09.00 மணிக்கு, காயல்பட்டினம் தாயிம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|