சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 64-வது செயற்குழு கூட்டம், எம்மன்றதின் 2018-2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் கடந்த 12.01.2018 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சகோதரர் VMT அப்துல்லாஹ் அவர்களின் இல்லத்தில் சகோதரர் முஹம்மத் நூஹு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் இப்ராஹீம் இர்ஷாத் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் சதக் ஷமீல் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
வரவேற்புரை ஆற்றிய மன்ற தலைவர் PMS முஹம்மது லெப்பை 2016-17 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழுவில் பணியாற்றி விடைபெற்ற ஏனைய உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்ததோடு, புதிதாய் இணைந்துள்ள உறுப்பினர்களை வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து மன்ற செயல்பாடுகளை பற்றிக் கூறுகையில், முன்னால் தலைவர் சகோதரர் முஹம்மத் நூஹு அவர்கள் புதிய சிந்தனைகள், தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பாகச் செயல்பட்டு நமதூருக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முனைப்பாகப் பணியாற்றியதை சுற்றிகாட்டினார். 1995இல் பைத்துல்மால் என்ற பெயரில் துவங்கப்பட்ட இம்மன்றம், பின்னர் ரியாத் காயல் நல மன்றம் எனப் பெயர் மாற்றம் பெற்று இதுவரை மருத்துவம், சிறு தொழில் மற்றும் கல்வி ஆகியவைக்கான உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
கல்வித்துறையில் காயல் நகரிலுள்ள, குறிப்பாக புறநகர்ப் பகுதியிலுள்ள சகோதர சமுதாயத்திற்கும் உதவிக்கரம் நீட்டும் பொருட்டு, அங்குள்ள ஏழை - எளிய மாணவ-மாணவியருக்கும், அவர்கள் கல்வி பயிலும் துவக்கப் பள்ளிகளுக்கும் தேவையான உதவிகளை செய்திட, இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் Kayal Schools Welfare Projects நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதர காயல் நல மன்றங்களோடு இணைந்து இமாம் & முஅத்தின் ஊக்கத்தொகை திட்டம். புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும், நோன்புப்பெருநாள் இரவில் நாட்டுக்கோழி திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நகர்நலப் பணிகளில் மகளிரையும் - சிறாரையும் ஊக்குவிக்கும் வகையில் WAKF நிதித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமையுரை:
தலைமையுரை ஆற்றிய மன்ற முன்னாள் தலைவர் சகோதரர் முஹம்மது நூஹு, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகளுக்கு தமது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார். எமது மன்றத்தின் அதிகப்படியான உதவித்தொகை மருத்துவம் சார்ந்து இருப்பது நகரில் கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் அதிகம் பரவுவதை உணர்த்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதனைக் கட்டுப்படுத்த நகரில் மருத்துவம் சார்ந்த முன்னெச்சரிக்கை திட்டங்கள் செயல்படுத்த முயற்சிக்க மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். Women And Kids Fund – WAKF மூலம் கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் பிரத்தியேக செயல்திட்டங்களில் பயன்படுத்திட செயற்குழு உறுப்பினர்கள் தங்களின் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகளுக்கு, அனைவரும் மன்ற செயல்பாடுகளில் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.
புதிய நிர்வாகிகள் அறிமுகம்:
மன்ற செயலாளர் சகோதரர் செய்யத் இஸ்மாயில் அவர்கள் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைத்தார். மன்ற செயல்பாடுகளில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:
1) P.M.S முஹம்மது லெப்பை (தலைவர்)
2) S.A.T (கூஸ்) முஹம்மது அபூபக்கர் (துணைத்தலைவர்)
3) S.M மீரா சாஹிப் நயீமுல்லாஹ் (துணைத்தலைவர்)
4) N.M. நோனா செய்யது இஸ்மாயில் (செயலாளர்)
5) S.A சித்திக் (துணைச்செயலாளர்)
6) S.A.C அஹ்மது சாலிஹ் (துணைச்செயலாளர்)
7) M.M.S. ஷேக் அப்துல் காதர் சூஃபி (பொருளாளர்)
8) வாவு கிதுர் முஹம்மது (துணைப்பொருளாளர்)
9) S.B முஹம்மது முஹியத்தீன் (துணைப்பொருளாளர்)
10) M.N முஹம்மது ஹசன் (தணிக்கையாளர்)
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்:
1) ஹைதர் அலி
2) S.M.A. சதக்கத்துல்லாஹ்
3) M.E.L. நுஸ்கி
4) ஹாபிழ் M.A. சேக் தாவூத் இத்ரீஸ்
5) A.H. முஹம்மத் நூஹு
6) S.L. சதக்கத்துல்லாஹ்
7) ஹாபிழ் P.S.J. ஜெய்னுல் ஆப்தீன்
8) Y.A.S. ஹபீப் முஹம்மது முஹ்சின்
செயற்குழு உறுப்பினர்கள்:
1) V.M.T. அப்துல்லாஹ்
2) K.S.M. அப்துல் காதர்
3) K.S. செய்யத் ஷஃபியுல்லாஹ்
4) H.M. இப்ராஹிம் இர்ஷாத்
5) A.R. முஹம்மது இப்ராஹீம் ஃபைசல்
6) A.S. அபூபக்கர் ஆதில்
7) A.H. சதக் ஷமீல்
8) M. யாசிர் தாஜுத்தீன்
9) M.M. செய்யத் இப்ராஹீம்
10) M.M. அபூபக்கர் சித்தீக்
11) M.S. தைக்கா சாஹிப்
12) A. ஜாய்த் மிஸ்கீன்
2016 – 2017 ஆம் ஆண்டு நிதி அறிக்கை:
மன்ற முன்னாள் பொருளாளர் சகோதரர் M.N.முஹம்மது ஹசன் அவர்கள் 2016-2017ஆம் ஆண்டிற்கான நிதி மற்றும் சந்தா நிலை அறிக்கையை வாசித்தார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சத்தை துணைப்பொருளாளர் சகோதரர் வாவு கிதுரு முஹம்மது அவர்கள் வாசித்தார்.
சகோதரர் SMA சதக்கத்துல்லாஹ், SL சதக்கத்துல்லாஹ், சேகு அப்துல் காதர் சூஃபி, KSM அப்துல் காதர் மற்றும் சகோதரர் இப்ராஹீம் ஃபைசல் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.
இறுதியாக மன்ற துணைத்தலைவர் கூஸ் முஹம்மது அபூபக்கர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில சகோதரர் PSJ ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|