காயல்பட்டினம் – சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.இ.ஷெய்க் அப்துல் காதிர் உடைய தந்தை, சதுக்கைத் தெருவைச் சேர்ந்த எல்.ஏ.இப்றாஹீம், 15.01.2018. திங்கட்கிழமையன்று 10.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 95. அன்னார்,
மர்ஹூம் ஹாஃபிழ் அத்திக்கா எல்.எம்.இ.அஜீஸுத்தீன் அவர்களின் மகனும்,
மர்ஹூம் குளம் செய்யித் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,
எம்.இ.அஜீஸுத்தீன், சென்னை KCGC அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.இ.ஷெய்க் அப்துல் காதிர், எம்.இ.செய்யித் முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையும்,
எம்.ஓ.மஹ்மூத் என்பவரது மாமனாரும்,
மர்ஹூம் எல்.ஏ.அப்துல் காதிர், மர்ஹூம் எல்.ஏ.ஜெய்னுத்தீன், மர்ஹூம் எல்.ஏ.சுலைமான், மர்ஹூம். எல்.ஏ.கனீ முஹம்மத் ஆகியோரின் மூத்த சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நேற்று (15.01.2018. திங்கட்கிழமை) 19.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்:
M.E.செய்யித் முஹ்யித்தீன் மூலமாக L.A.K.புகாரீ |