அரசு கேபிள் டீவி நிறுவனம் தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில், அரசு கேபிள் டிவி சந்தாதாரர்கள் - பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
அரசு கேபிள் சேவை வழங்கும் - உள்ளூர் கேபிள் சேவை நிறுவனங்கள், சந்தாதாரர்களுக்கு முறையான பதிவு விபரங்கள் வழங்கவில்லை.
அரசு நிர்ணயித்துள்ள கட்டுமான 70 ரூபாய்க்கும் மேலே வசூல் செய்கிறார்கள்.
தற்போது - காயல்பட்டினம் பகுதியில் AMN என்ற தனியார் நிறுவனத்தின் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டப்பிறகு, பல அரசு கேபிள் சந்தாதாரர்கள், தனியார் நிறுவனத்தின் சேவைக்கு மாறிட, நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க பலமுறை கோரிக்கை வைத்தும், சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம் நடத்திட கோரிக்கை வைத்தும், இது வரை எந்த நடவடிக்கையும் - கேபிள் டிவி தாசில்தாரால் எடுக்கப்படவில்லை.
இந்த அலட்சியம் - இந்த முறைக்கேடுகள், கேபிள் டிவி தாசில்தாரின் - முழு ஆதரவுடன் தான் நடைபெறுகிறது என்ற உறுதியான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே - தன் கடமையை செய்ய தவறியுள்ள தூத்துக்குடி மாவட்ட கேபிள் டிவி தாசில்தார் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பொது மக்களின் குறைகளை கேட்க - விழிப்புணர்வு முகாம் நடத்திட உத்தரவிடும்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் 08.01.2018. அன்று, நடப்பது என்ன? குழுமம் சார்பாக புகார் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 08, 2018; 10:30 pm]
[#NEPR/2018010808]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|