காயல்பட்டினத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் - பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது குறித்து - பொது மக்களும், பொது நல அமைப்புகள் - பல தருணங்களில் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார்கள்.
இருப்பினும் - மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்திக்கொண்டு, காயல்பட்டினம் நகராட்சி - நகரில் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலைகளை அமைக்க முயற்சிசெய்து வருகிறது.
எதிர்வரும் 9 ஆம் தேதியன்று, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் - 5 சாலைகள், பேவர் பிளாக் முறையில் போட - காயல்பட்டினம் நகராட்சி, டெண்டர் விட்டுள்ளது.
பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், பேவர் பிளாக் சாலைகள் போட, காயல்பட்டினம் நகராட்சி முனைப்பு காட்டுவதன் முக்கிய காரணம் - பேவர் பிளாக் கற்களுக்கு - அரசு அங்கீகரித்த SCHEDULE OF RATE கிடையாது என்பது தான். இதனை பயன்படுத்தி - காயல்பட்டினம் நகராட்சி, தன் இஷ்டம் போல், இதற்கான விலையை நிர்ணயித்து டெண்டர் விடுகிறது.
எனவே - காயல்பட்டினம் நகராட்சியில் பேவர் பிளாக் சாலைகள் போடாமல், தரமான தார் சாலைகள் போடவும், பேவர் பிளாக் பயன்படுத்தி போடப்பட்டுள்ள அனைத்து சாலைகளையும் தணிக்கை விசாரணைக்கு உட்படுத்தவும் உத்தரவிட கோரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், 08.01.2018. அன்று மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 08, 2018; 7:30 pm]
[#NEPR/2018010805]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |