காயல்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியாகப் பணியாற்றிய – பேயன்விளை ஏ.ஐ.டீ.யு.சி. காலனியைச் சேர்ந்த ஐ.கணபதி செல்வி, 09.01.2018. செவ்வாய்க்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 49. அன்னார், பா.அய்யனார் என்பவரது மனைவியாவார். இவர்களுக்கு, ப்ரியா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். உடல் நல்லடக்கம், இன்று 12.00 மணியளவில், பை-பாஸ் சாலை இடுகாட்டில் நடைபெற்றது.
அடக்கத்திற்கு முன் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராணி டப்ஸ், செவிலியர், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் உள்ளிட்ட – காயல்பட்டினம் நகர பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.
மறைந்த கணபதி செல்வி, அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கு முன் சுமார் 15 ஆண்டு காலம் காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
|