காயல்பட்டினத்தில் அம்மா சிமெண்ட் சப்ளை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
வீடு கட்டும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் நோக்கில் - குறைந்த விலையில், அம்மா சிமெண்ட் - தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த சில மாதங்களாக - குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் - காயல்பட்டினம் நகராட்சியில், அம்மா சிமெண்ட் கிடைக்கவில்லை. இது குறித்து விசாரித்தால் - தங்களுக்கு ஸ்டாக் வரவில்லை என்ற பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படுகிறது.
இதனால் - பொது மக்கள், பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்; எனவே - இது சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம், 08.01.2018. அன்று, நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 08, 2018; 8:30 pm]
[#NEPR/2018010806]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |