நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
2018ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் – அரிசி பெறும் குடும்ப அட்டைகள், காவலர் குடும்ப அட்டைகள், அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் – ஆக மொத்தம் 4,44,213 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 06.01.2018. சனிக்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
இப்பரிசுத் தொகுப்பில்...
பச்சரிசி ஒரு கிலோ,
சீனி ஒரு கிலோ,
முந்திரி பருப்பு 20 கிராம்,
கிஸ்மிஸ் 20 கிராம்,
ஏலக்காய் 5 கிராம்,
2 அடி கரும்புத்துண்டு 1 எண்ணம்
ஆகியன அடக்கம். பொதுமக்கள் இப்பொங்கல் பரிசுத் தொகுப்பை, தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் பெற்றுப் பயனடைய கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|