உள்ளாட்சி மன்றங்களின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட வரைவு ஆவணங்கள் குறித்து கருத்துக்களைத் தெரிவிக்க, 2018 ஜனவரி 05ஆம் நாள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சிமன்றங்களின் வார்டுகள் தற்போது மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. வரைவு விபரங்கள், கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
அது குறித்த ஆட்சேபனைகளை - ஜனவரி 2 வரை சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியரும், ஜனவரி 4 வரை சமர்ப்பிக்கலாம் என்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையரும் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நீட்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் - பொது நல அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளாலும் வைக்கப்பட்டன. நடப்பது என்ன? குழுமம் இது சம்பந்தமான கோரிக்கையை வைத்தது.
வழங்கப்பட்டுள்ள கால அவகாசம், ஜனவரி 5 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 3, 2018; 6:00 pm]
[#NEPR/2018010301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|