காயல்பட்டினம் ‘அறிவுத் துளிர் நண்பர்கள் வட்டாரம்’ சார்பில், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில், நேர மேலாண்மை குறித்த கருத்தரங்கம், 30.12.2017. அன்று 14.30 மணிக்கு, எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஞானையா தலைமையில் நடைபெற்றது.
இதில், எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நேர மேலாண்மை குறித்த தகவல்களை உள்ளடக்கி, உரையாற்றினார்.
முன்னதாக, பேராசிரியர் சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார். துளிர் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார். சமூக ஆர்வலர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் – சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்திப் பேசினார்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கருத்தரங்கின் இறுதியில், பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சிறப்பு விருந்தினர் விளக்கமளித்தார்.
துளிர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், திரளானோர் கலந்துகொண்டனர்.
|