சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்ட நிகழ்வுகளை உள்ளடக்கி, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு சிறப்பு கூட்டம் 26/12/2017 செவ்வாய்கிழமை அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் நெல்லை மண்டல பொறுப்பாளர் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாசில் சமீர் அவர்களும், மாவட்ட செயலாளர் ஸ்ரீவை உஸ்மான் அவர்களும், காயல் நகர பொறுப்பாளர் நிசார் அவர்களும் கலந்துகொண்டனர்.
மாவட்ட தலைவரின் தலைமையுரையை தொடர்ந்து மாவட்ட பொதுச்செயலாளர் சம்சுதீன் அவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டிய விசயங்களை விளக்கி கூறினார்.
இந்த மாவட்ட செயற்குழுவின் தீர்மானங்கள்:
1. ஆழ்வார்திருநகர் பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசுபடும் விதமாக குறிப்பிட்ட சில இடங்களிலிருந்து கழிவுநீர்கள் மக்கள் புழங்கும் நீர்நிலைகளில் கலப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க அரசின் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய ஆய்வுக்குழு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.
2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் குறைந்தது இரண்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பாக இருக்க வளையங்கள் அமைத்து பராமரிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறது.
3. கட்சியின் செயல்வீரர்களுக்கான அடுத்த மூன்று வருட செயல்வீரர் அடையாள அட்டை வழங்கிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பூர்த்தி செய்யாத கிளைகளில் படிவத்தை விரைந்து பூர்த்தி செய்து வருகின்ற 31/12/2017 ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
4. கட்சியின் வருடாந்திர நிதி திரட்ட அனைத்து கிளைகளிலும் சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்து கட்சியின் செயல்வீரர்கள் அனைவரின் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகளை பெற்று கட்சியின் வளர்ச்சிக்காக அதிகமாக நிதி திரட்ட ஏற்பாடுகள் செய்யவேண்டி தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த SDPI கட்சியின் செயல்வீரர்கள் அயராது உழைத்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மாநில செயற்குழு உறுப்பினர் தனது முடிவுரையில் கேட்டுக் கொண்டார்கள்.
இறுதியாக கட்சியின் மாவட்ட பொருளாளர் மைதீன் கனி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
H.ஷம்சுத்தீன்
(தூ-டி. மாவட்ட பொதுச் செயலாளர், SDPI)
|