காயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறப்பு விழா, 20.12.2017. புதன்கிழமையன்று 16.30 மணியளவில் நடைபெற்றது.
பள்ளி செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப், தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ, பிரமுகர்களான எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, வாவு எம்.எம்.உவைஸ், வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.அப்துல் ஹக், எம்.டீ.ஜாஃபர் ஸாதிக், வி.ஐ.ஜெய்னுல் ஆப்தீன், எஸ்.எச்.அபுல் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி புதிய கட்டிடத்தின் இரு பகுதிகளை - வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் துஆ இறைஞ்சினார். இந்நிகழ்ச்சியில், சென்ட்ரல் பள்ளிகளின் நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
M.பீர் முஹம்மத் ஹுஸைன்
(ஆசிரியர், சென்ட்ரல் மேனிலைப் பள்ளி.)
|