காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை சார்பில், கண் பார்வையற்ற சிறுவனின் வாழ்வைச் சித்தரிக்கும் சர்வதேச திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நமது துளிர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு சமுக நோக்கம் கொண்ட நிகழ்வுகளை இதற்க்கு முன்பு நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்ற உலக சினிமாக்களை திரையிடல் வேண்டும் என்ற நோக்கத்தில் குறுகிய நேரத்தில் திட்டமிடப்பட்டு 17.12.2017 ஞாயிறு அன்று மதியம் 2.30 மணியளவில் நமது துளிர் உள்ளரங்கத்தில் புகழ் பெற்ற ஈரானிய இயக்குனர் மஜீத் மஜ்தியின் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான “தி கலர் ஆப் பேரடைஸ்” திரைப்படம் திரையிடப்பட்டது.
கண் பார்வையற்ற ஒரு சிறுவனின் கல்வி இயல்பான சிறிய ஆசைகள் உறவுகளிடமும் அவன் தந்தையிடம் எதிர்பார்க்கும் அன்பையும், அரவனைப்பையும் பற்றியும் அதனால் அவனுக்கும், அவனுடைய கந்தை மற்றும் பாட்டிக்கும் இடையே ஏற்படும் உளவியல் ரீதியான தாக்கத்தையும் பற்றி மிக அழகாகவும், ஆழமாகவும் நம்மிடையே பேசுகிறது இத்திரைப்படம்.
கண் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளயில் படிக்கும் சிறுவன் முஹம்மது பள்ளி விடுமுறைக்காக ஊருக்கு செல்வதற்கு தன் தந்தையின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். மனைவியை இழந்திருக்கும் முஹம்மதுவின் தந்தை தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு பார்வையற்ற மகன் முஹம்மது தடையான இருக்கக்கூடும் என்று பள்ளிக்கூடத்திலேயே விட்டுச்செல்ல விரும்புகிறார். விட்டுச்செல்ல வாய்ப்பில்லாமல் போகவே தன்னுடைய சொந்த ஊறுக்கு அழைத்துச் செல்கிறார்.
தாயை இழந்திருக்கும் சிறுவன் முஹம்மது அவனது பாட்டியிடமும்(தந்தையின் அம்மா) அவனது இரண்டு சகோதரிகளிடமும் அன்பை பரிமாறிக்கொள்கிறான். சகோதரிகளுடன் பள்ளிக்கூடம் செல்கின்றான். முஹம்மது பள்ளிக்கூடம் செல்வதை விரும்பாத அவனது தந்தை அச்சிறுவனை ஒரு கண் பார்வையற்ற மரத்தச்சரிடம் வேலைக்கு சோத்துவிடுகிறார்.
அதை விரும்பாத முஹம்மதுவின் பாட்டி சிறுவனை மீண்டும் வீட்டிற்கே கூட்டிவர வேண்டும் என்று வீட்டைவிட்டு வெளியேற போகும் போதுஇ வயதாகிக்கொண்டிருக்கும் எனக்குப் பிறகு பார்வையற்ற தனது மகனை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதாலும் அவனுடைய எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பதற்;கு அவனுக்கு இந்த தொழில் உதவியாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறான் மேலும் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புதல் கேட்கிறான்!
பேரன் முஹம்மதுவின் நினைவுகளில் உடல்நலம் இன்றி முஹம்மதுவின் பாட்டி இறந்துவிடவே முஹம்மதுவின் தந்தைக்கு இரண்டாவது திருமணம் தடைபடுகிறது. வெறுமையும் தனது மகன் முஹம்மதுவின் நினைவுகளும் தன்னை வாட்டவே முஹம்மதுவை மீண்டும் தன்னுடனே வீட்டிற்கு அழைத்து வரும் போது தந்தையும் மகனும் ஆற்றில் ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இருவரும் கரை ஒதுங்கிய நிலையில் முஹம்மதுவின் தந்தை முஹம்மதுவை அணணத்துக் கொண்டு அழுதவாறும் மரங்கொத்தி பறவைகளின் ஓசைகளை தனது விரல் அசைவுகளில் மொழி பெயா;ப்பு செய்தவாறு தந்தையை அணணத்துக் கொள்கிறான் முஹம்மது!
50க்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கண்பார்வையற்ற சிறுவனின் உணர்வுகளை உணர்த்திய இத்திரைப்படம் போன்று சிறப்புடைய திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட வேண்டும் என்றும் மாணவ - மாணவிகளுக்கு என்று தனியாக திரையிட்டு காட்டினால் சிறுவயதிலேயே அவர்களுக்கு இது போன்ற சமூக ஆர்வத்தினை வளர்க்க உதவிடும் வகையில் அமையும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
விரைவில் அந்த எண்ணங்கள் பள்ளி கல்லூரிகளின் துணையோடு நிறைவேற்றப்படும் என்று துளிர் நிறுவனர் வக்கீல் அஹமது உறுதியளித்தார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross