சஊதி அரபிய்யா - ஜித்தாவில் இயங்கும் காயல் நற்பணி மன்றத்தின் 108 வது செயற்குழு ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பால உணவாக கூட்டரங்கில் இனிதே நடந்தேறியது. அதன் விபரம் வருமாறு:
சரியாக மாலை 07:00 மணிக்கு துவங்கிய செயற்குழுவிற்கு செயலர் சகோ.செய்யிது இப்ராஹீம், யான்பு பொறியாளர் சகோ.நெய்னா முஹம்மது. முன்னிலை வகித்தனர். சகோ.ஆதம் சுல்தான் தலைமை ஏற்றார். சகோ.அரபி ஷுஐபு இறைமறை ஓதினார். சகோ. முஹம்மது ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையுரை:
"நம் மன்றத்தின் முந்தய செயற்குழு யான்புவில் சிறப்பாக நடந்தேறிய நினைவுகள் மனதில் இன்னும் நிழலாடுகிறதென்றும், நீண்ட தொலைவிலிருந்து வந்து இச்செயற்குழுவில் கலந்து பயனாளிகளின் தேவைகளை அறியப்பெற்று அதன் நிவாரணத்தில் பங்கு பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறதென்றும், நம் மன்றத்தின் அளப்பரிய பணிகள் தொய்வின்றி தொடர பிராத்திப்பதாகவும்" கூறி அமர்ந்தார் யான்புவிலிருந்து வந்து கலந்து கொண்ட மன்ற ஆலோசகர் சகோ.ஆதம் சுல்தான்.
மன்ற செய்லபாடுகள்:
"மக்கா மற்றும் யான்பு சொந்தங்களின் அன்பழைப்பையேற்று செயற்குழு கூட்டம் அந்நகரங்களுக்கு நகர்ந்ததால், நீண்ட இடைவெளிக்குப்பின் ஜித்தாவில் நடைபெறும் செயற்குழு இதுவென்றும், அவ்விரு செயற்குழுவிற்கு பிறகு நம் மன்றம் பல பணிகளை செய்துள்ளதென்றும், இன்னும் நிறைய செய்ய நம் மன்றம் தயாராகவுள்ளதென்றும், அதற்கான முதுகெலும்பான சந்தாக்களை நம் சகோதரர்களிடம் பெறுவதில் அதிக முனைப்பு காட்டவேண்டுமென்றும்” உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார் செயலர் சகோ.செய்யிது இப்ராஹீம்.
கருத்துரை:
"நம் மன்றம் பயனாளிகளுக்கு வழங்கும் உதவிகள் இறைவனிடத்தில் மிகப்பெரும் கூலியை பெற்றுத்தருமென்றும், மக்களோடு மக்களாக நம் மன்றம் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டால் இன்னும் நிறைய கடமைகளாற்றலாமென்றும் அதற்கான சக்தியை நம் மன்றம் பெற இறைவனிடத்தில் பிராத்திக்கிறேன்" என கூறி தனது கருத்துரையை சுருக்கமாக முடித்தார் யான்பு பொறியாளர் சகோ.நெய்னா முஹம்மது.
ஷிஃபா குறித்து:
நம் காயல் நல மன்றங்களின் மருத்துவ அங்கமான "ஷிஃபா" வின் தற்போதைய நகர்வுகள், நிலைகள் மற்றும் விபரங்களையும், "மக்கள் மருந்தகம்" குறித்த செய்திகளையும் விரிவாகத்தந்தார் சகோ.சீனா மொகுதூம் முஹம்மது.
நிதி நிலை:
மன்றத்தின் தற்போதைய இருப்பு, பயனாளிகளுக்கான விடுப்பு, மீதமிருப்பு என நிதி தொடர்பான விபரங்களை பட்டியலிட்டார் சகோ.முஹம்மது ஆதம்.
உதவிகள்:
பயணாளிகளிடமிருந்து வந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இருதய சிகிச்சை, விபத்து, மார்பக கட்டி, குறை பிரசவம் என 15 மருத்துவ உதவிகளும், பொறியியல் மற்றும் தொழிற்கல்விக்கான இரு கல்வி உதவிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
மருத்துவம் எடுப்போர் விரைந்து குணம் பெறவும், மேற்படிப்பு பெறுவோர் அவர்களின் இலக்கை அடைந்து வெற்றி ஈட்டவும் பிரார்திக்கப்பட்டது.
கலந்துரையாடல்:
மன்றப்பணிகள் குறித்தும், நகர் பயனாளிகள் குறித்தும் அவர்களின் மருத்துவ தேவைகள் குறித்தும், உயர் கல்விக்கான வழிகாட்டுதல் பற்றியும் இதர முக்கிய விழிப்புணர்வு செய்திகள் பற்றியும் ஆரோக்கியமான வாதப்பபிரதிவாதங்களுடன்கூடிய கலந்துரையாடல் மன்ற செயற்குழு உறுப்பினர்களால் முன்னெடுப்பட்டு சிறந்த ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.
தீர்மானம்:
1. அடுத்த செயற்குழு வரும் 12 ஜனவரி 2018 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது இன்ஷாஅல்லாஹ்.
2. காயலர் மனமகிழ் சங்கமம் எதிர்வரும் பிப்ரவரி 09 / 2018 அன்று ஜித்தா வெளியார்ங்க இஸ்திரகாவில் வைத்து நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது இன்ஷாஅல்லாஹ்.
சகோதரர்கள் முஹம்மது ஆதம் - ஷெய்கு அப்துல் காதிர் அனுசரணையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, சகோ. ஷெய்கு அப்துல்லாஹ் நன்றி கூற, சகோ.ஜஅஃபர் சாதிக் பிரார்த்திக்க - கஃப்பாராவுடன் இனிதே நிறைவுற்றது செயற்குழு கூட்டம் அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் - காட்சிகள்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
15.12.2017.
|