காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில், வருகின்ற 04.01.2018 & 05.01.2018 ஆகிய இரு நாட்களில் மாணவர்களுக்கான கலை-இலக்கியப் போட்டிகள் & அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இது குறித்து, அப்பள்ளியின் துணை செயலாளர் கே.எம்.டீ.சுலைமான வெளியிட்டுள்ள தகவலறிக்கை:
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!
முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, இவ்வாண்டில் பல்வேறு கலை-இலக்கிய நிகழ்வுகளை சிறப்புற நடத்தியதை தாங்கள் அறிவீர்கள். அவற்றின் தொடர்ச்சியாக, இன்ஷா அல்லாஹ், 04.01.2018 வியாழக்கிழமை அன்று, கலை-இலக்கியப் போட்டிகளும், 05.01.2018 வெள்ளிக்கிழமை அன்று, அறிவியல் கண்காட்சியும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில் பங்கேற்க வட்டார பள்ளி மாணவர்களை அன்போடு அழைக்கிறோம். குறிப்பிட்ட போட்டிப் பிரிவுகளைத் தவிர, ஏனைய பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் மாணவிகளுக்கே நடத்தப்படவுள்ளதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
கலை-இலக்கியப் போட்டிகள்
நிகழ்வின் முதலாம் நாளான 04.01.2018 அன்று, நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கலை-இலக்கியப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காலை 09:30 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சிகள், நான்கு தனிப் பிரிவுகளாக நடைபெறுகின்றன. பிரிவுகள், போட்டிகள் & தலைப்புகளின் விபரங்கள் கீழ் வருமாறு:
<1> முதலாம் பிரிவு: 4-ஆம் & 5-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகள்
(அ) பேச்சுப் போட்டி (3 நிமிடங்கள்): தாஹா நபியின் தனிச் சிறப்புகள் (அல்லது) அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்
(ஆ) பாட்டுப் போட்டி (3 நிமிடங்கள்): நபிபுகழ் பாடல்கள்
<2> இரண்டாம் பிரிவு: 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் மட்டும்
(அ) பேச்சுப் போட்டி (4 நிமிடங்கள்): மன்னிக்கும் மாண்பாளர் மஹ்மூது நபிகளார் (அல்லது) அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்
(ஆ) கட்டுரைப் போட்டி (தமிழ் / ஆங்கிலம்) (3 பக்கங்கள்): மாற்றாரை மதிக்கும் மஹ்மூது நபிகளார் (அல்லது) Honour of Prophet Muhammed (peace be upon him) Towards Distinct Religions
<3> மூன்றாம் பிரிவு: 9-ஆம் & 10-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் மட்டும்
(அ) பேச்சுப் போட்டி (5 நிமிடங்கள்): நபிகளார் நிகழ்த்திய அற்புதங்கள் (அல்லது) அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்
(ஆ) கட்டுரைப் போட்டி (தமிழ் / ஆங்கிலம்) (4 பக்கங்கள்): நற்குணத்தின் நாயகம் அண்ணல் நபிகள் நாயகம் (அல்லது) A Virtue Model of Prophet Muhammed (peace be upon him)
<4> நான்காம் பிரிவு: 11-ஆம் & 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் மட்டும்
(அ) பேச்சுப் போட்டி (5 நிமிடங்கள்): இன்றைய பிரச்சனைகளைத் தீர்க்க இஸ்லாம் கூறும் இனிய வழிகள் (அல்லது) அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்
(ஆ) கட்டுரைப் போட்டி (தமிழ் / ஆங்கிலம்) (4 பக்கங்கள்): உமறுப்புலவர் கண்ட நபிகள் நாயகம் (சீறாப்புராணம்) (அல்லது) Prophet Muhammed (peace be upon him) at the Sight of Poet Umar
கலை & அறிவியல் கண்காட்சி
நிகழ்வின் இரண்டாம் நாளான 05.01.2018 அன்று, பள்ளி மாணவியருக்கான கலை & அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 09:30 முதல் நன்பகல் 12:30 மணி வரை நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஆர்வமுள்ள மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
பரிசுகள்
போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கும், கண்காட்சியில் தேர்ச்சிபெறும் மாணவிகளுக்கும், இன்ஷா அல்லாஹ் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும்.
சிறப்பு பரிசாக தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது.
கூடுதல் தகவலுக்கு…
இந்நிகழ்வுகள் குறித்த கூடுதல் தகவலுக்கும், போட்டிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களுக்கும், பள்ளியை அனுகவும்:
கே.எம்.டீ.சுலைமான்,
துணை செயலாளர்,
முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி,
காயல்பட்டினம்.
தொலைபேசி: 9486655338 / 04639-280302
மின்னஞ்சல்: muhyiddeenschool@yahoo.com
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கே.எம்.டீ.சுலைமான்
|