தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் – மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மத்திய – மாநில அரசுகளின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட இலவச உதவிகள் குறித்த பரப்புரை மாவட்டம் முழுக்க செய்யப்பட்டு வருகிறது.
இன்று காலையில், சிறப்பு வாகனத்தில் காயல்பட்டினம் வந்த பரப்புரைக் குழுவினர், மஹான் ஜாஃபர் ஸாதிக் அப்பா தர்ஹா முனையில் - முரசுகளை முழங்கி மக்களை ஒன்று சேர்த்தது. மக்கள் திரண்டதும், அரசின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட இலவச உதவிகள் குறித்து பரப்புரைக் குழுவினர் விளக்கிப் பேசினர்.
இப்பரப்புரையை, நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் அவதானித்தனர். இதன்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை விளக்கும் பிரசுரமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
|