காயல்பட்டினத்தில் சமூக விரோதிகளின் மது பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் சார்பில் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கடந்த 15/12/2017 வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்டது.
இந்த கோரிக்கை மனுவில் முக்கியமாக காயல்பட்டினம் பகுதிகளில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விசயமாக காவல்துறை அதிகாரிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த விவாதத்தில் காவல்துறை சுமூகமான சூழலை ஏற்படுத்தி தரும் என்று கூறியுள்ளனர்.
முக்கியமாக காயல்பட்டினத்தில் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து சமூக தீமைகளும், சமூக சீர்கேடுகளும் நிலவுவதால் தூத்துக்குடி மாவட்ட போதை தடுப்பு பிரிவு உடணடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போதை தடுப்பு அவசர இலவச அலைபேசி எண்களையும், பொதுமக்கள் தயிரியமாக காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு விரைந்து செயல்பட வழிவகுக்கவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதனையும் விரைவில் பரிசீலனைக்கு எடுப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு கட்டங்களில் காயல்பட்டினம் பகுதியில் போதை தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததாகவும் மேலும் போதை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் காவல்துறை ADSP அவர்கள் கூறினார்கள்.
இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காயல் சம்சுதீன் அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் ஸ்ரீவை உஸ்மான் மற்றும் காயல் நகர பொறுப்பாளர் நிசார் அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் SDPI கட்சியின் செயல்வீரர்களும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.
தகவல்:
செய்தி மற்றும் ஊடகத்துறை,
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
|