ஹாங்காங் காயலர்களின் கூட்டமைப்பான ‘காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங்’ அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்கான உண்டியல் நன்கொடையாக 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டுள்ளதோடு, வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் நாளன்று சிற்றுலா செல்லவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் பி.எம்.ஐ.சவூத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 10.02.2018 சனிக்கிழமையன்று, அமைப்பின் துணைத்தலைவர் யு. முஹம்மது நூஹு அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் ஆரம்பமாக, நகர்நலனுக்கான நிதி சேகரிப்புத் திட்டத்திற்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு, செயற்குழு உறுப்பினர்கள் தொகைகளைக் கணக்கிட்டனர். நிறைவில், மொத்த உண்டியல் நிதியாக ரூ.1,60,000 தொகை சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
உண்டியல்கள் கணக்கிட்டப்பின் அஸர் தொழுகைக்காக சிறு இடைவேளைக்கு பின்னர் கூட்டம் தொடர்ந்தது.
முதலாவதாக, அமைப்பின் தலைவர் ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி வரவேற்புரையாற்றினார். அவர் தனது வரவேற்புரையில், உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ் தாராள மனதுடன் உதவிய மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இத்திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட் நிதியினை நமது ஊரில் தேவையுள்ள மக்களை கண்டறிந்து முறையாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
அடுத்து, செயலாளர் பி.எம்.ஐ.சவூத் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்தார். பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. அண்மையில் காலமான எமது அமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கத்தீபு கே.எச். செய்யித் அலவீ அவரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவர்களது மஃபிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.
2. நகர்நலப் பணிகளாற்றுவதற்கான நிதியாதாரத்தைத் திரட்டும் உண்டியல் திட்டத்தின் கீழ், அனைத்து உறுப்பினர்களுக்கும் அடுத்த பருவத்திற்கான உண்டியல்களை விரைவில் வினியோகிக்கும் பொறுப்பு செயற்குழு உறுப்பினர்கள் வசம் பிரித்தளிக்கப்பட்டது.
3. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக ரூபாய் 80 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
4. இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவரிடமிருந்து வந்திருந்த தகவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, இக்ராஃவின் அடுத்த பருவத்திற்க்கான சுழற்சிமுறை நிர்வாகத் தலைமைப் பொறுப்பை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய பரிந்துரைக்கலாம் என கருத்து முன்வைக்கப்பட்டது. இக்ராஃவின் Unified Professional Course Scholarship திட்டத்தில் இணைவது இல்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது.
5. SHIFA ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
6. பேரவை சார்பில் ஏப்ரல் 8 ஞாயிற்றுகிழமை அன்று YMCA Wu Kwai Sha Youth Village ற்கு சிற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
7. பேரவையின் நடப்பு ஆண்டிற்கான பொதுக்குழுக்கூட்டத்தை எதிர்வரும் புனித ரமழான் மாதத்திற்கு பின்னர் நடத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் பி.எம்.ஐ.சவூத் நன்றி கூற, ஹாஃபிழ். பி.எஸ்.அஹமது ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி தலைவர் ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி மற்றும் துணைத் தலைவர் யு. முஹம்மது நூஹு அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|