காயல்பட்டினம் நகரின் அனைத்து பொதுநல அமைப்புகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வு சுற்றறிக்கை வழங்கிட அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 54 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 09-02-2018வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் துணைத்தலைவர் S.A.C. ஹமீத் அவர்களது இல்லத்தில் செயற்குழு உறுப்பினர் L.T.இப்ராஹிம் அவர்களின் தலைமையில் ஹாஃபிழ் முத்து அஹ்மது அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.
ஷீபா மருத்துவ உதவி
மன்றத்தின் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் DR. ஹமீத்யாசிர் அவர்களின் பரிந்துரைப்படி 10 நபர்களுக்கு ஷீபா மருத்துவ உதவியாக RS 40,௦௦௦ நிதி வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
பொது அமைப்புகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு சுற்றறிக்கை
ஊரில் தற்போது வெளிமாநில வியாபாரிகளால் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதை பங்கேற்றோரின் வேதனையான,விரிவான,கருத்துப்பரிமாற்றங்களைத் தொடர்ந்து முதல் கட்டமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முயற்சியாக முதலில் அனைத்து பொது அமைப்புகளுக்கும் கீழ்க்கண்டபடி ஒரு சுற்றறிக்கை வழங்கிட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இறுதியாக மவ்லவீ ஹாஃபிழ்எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்ழரீதுஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)
|