காயல்பட்டினம் புறநகர் பகுதிகளான அருணாச்சலபுரம், மங்களவாடி, எல்.ஆர்.நகர் பகுதிகளில் சமுதாயக் கூடம் கட்டிட, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாவட்ட அலுவலரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் ஆதி திராவிட சமுதாய மக்கள் உள்ளனர். குறிப்பாக - அருணாச்சலபுரம், மங்களவாடி மற்றும் எல்.ஆர்.நகர் / அழகாபுரி பகுதிகளில் அதிகளவில் இச்சமுதாய மக்கள் உள்ளனர்.
அம்மக்கள், தம் பயன்பாட்டிற்காக அவரவர் பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைத்துத் தருமாறு பல்லாண்டு காலமாக கோரி வருகின்றனர்.
தமிழக அரசின் ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக, சமுதாய கூடங்கள் கட்டும் திட்டம் உள்ளதால், அந்த திட்டம் மூலம் - அருணாச்சலபுரம், மங்களவாடி மற்றும் எல்.ஆர்.நகர்/அழகாபுரி பகுதிகளில் சமுதாய கூடம் தனித்தனியாக அமைத்திட - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக நேற்று மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 20, 2018; 8:30 am]
[#NEPR/2018022002]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|