காயல்பட்டினம் நெய்னார் தெருவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய குத்பா பள்ளியில் புனரமைப்பு & புதிய கட்டுமான பணிகள் 02.02.2018 அன்று துவங்கப்பட்டது. இது குறித்து, பள்ளிவாயிலின் நிர்வாகக் குழு உறுப்பினர் கே.எம்.டீ.சுலைமான் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை கீழ் வருமாறு:
வங்கக் கடலலைகள் வருடிக்கொண்டே வாழ்த்தும் தங்கக் காஹிர் பதியின் மத்தியப் பகுதியில், 1265 ஆண்டுகளுக்கு முன்பு மஹான் முஹம்மது கல்ஜி ரஹ்மத்துல்லாஹி அவர்களால் கட்டப்பட்ட மிகப் பழமை வாய்ந்த வணக்கக்கூடம் நமது குத்பா பெரியப்பள்ளி.
இடவசதி இல்லாமையால், ஜூம்ஆ தொழுகை அங்கு நடத்த முடியாத சூழ்நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது. எனவே, பள்ளியின் வெளிப்பகுதி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள் இடிக்கப்பட்டு புனரமைக்க, பள்ளி நிர்வாகத்தினரால் முடிவுசெய்யப்பட்டு, 02.02.2018 வெள்ளிக்கிழமை அன்று அடிக்கல் நாட்டு நிகழ்வு விமர்சையாக நடைப்பெற்றது.
சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில், ஹாஜி R.S. அப்துல் காதர், ஹாஜி வாவு S. காதர் சாஹிபு, ஹாஜி குளம் ஷெய்கு அப்துல் காதர், ஹாஜி M.K. முஹைதீன் தம்பி, ஹாஜி M.S. அப்துல் காதர், சென்னை எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் உரிமையாளர் ஹாஜி S. அக்பர்ஷா, ஹாஜி V.I. புஹாரி, கத்தீபு மவ்லவி H.A. அஹமது அப்துல்காதர் ஆலிம், கத்தீபு மவ்லவி நஹ்வி முஹம்மது முஹைதீன் & ஹாஜி A.K. கலீல் உள்ளிட்ட காயல்பட்டினத்தின் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் துவக்கமாக, K.O. மஹ்மூது இறைமறை வசனம் ஓதினார். காயல் S.E. அமானுல்லாஹ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். கத்தீபு H.A. அஹமது அப்துல் காதர் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் & ஒளிப்படங்கள்
கே.எம்.டீ சுலைமான்
|