காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளிலுள்ள அனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் முழுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வராமல், “காயல்பட்டினம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத ஊர்” என்ற அறிவிப்பை வெளியிடக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரியுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் காயல்பட்டினம் கடற்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் - பல லட்ச ரூபாய் செலவில், பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் - அவற்றை இதுவரை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடவில்லை. இது சம்பந்தமாக, பல முறை - நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் காயல்பட்டினம் நகராட்சி எடுக்கப்படவில்லை.
இதற்கு மாறாக - திறந்த வெளி கழிப்பிடம் (OPEN DEFECATION FREE) இல்லாத ஊர் என்ற பொய்யான அறிவிப்பை வெளியிடுவதற்காக, காயல்பட்டினம் நகராட்சி அக்டோபர் 3, 2017 அன்று தீர்மானம் (1461) நிறைவேற்றியுள்ளது. இது உண்மைக்கு புறம்பான தீர்மானமாகும்.
எனவே - காயல்பட்டினம் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட அனைத்து கழிப்பிடங்களையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல், திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத ஊர் என்ற அறிவிப்பு, காயல்பட்டினம் நகராட்சி குறித்து வெளியிடவேண்டாம் என கோரி, மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS அவர்களிடம்,நேற்று - நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 20, 2018; 10:30 am]
[#NEPR/2018022003]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|