காயல்பட்டினம் ஒருவழிப்பாதையை இணைக்கும் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காண்பிக்கும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் - பெரிய நெசவு தெரு, எல்.கே.லெப்பை தம்பி சாலை, பிரதான சாலை, ஹாஜியப்பா சாலை ஆகியவை ஒரு வழிப்பாதையாக உள்ளன.
சீரான போக்குவரத்திற்கு இடையூறாக - பிரதான சாலை மற்றும் எல்.கே.லெப்பை தம்பி சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் (ஹாஜியப்பா பள்ளி சாலை - எல்.கே.மேனிலைப்பள்ளி இடையில்) பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன.
அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்திற்கு வசதியாக சாலையை பராமரிக்க பல முறை - காயல்பட்டினம் நகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டும் இது வரை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
கண்துடைப்புக்காக ரெய்டு என்ற பெயரில் செய்தி தாள்களில் வருவதற்காக நடவடிக்கை எடுத்துவிட்டு, ஆக்கிரமிப்புகள் செய்துள்ளவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு - ஆக்கிரமிப்புகளை தொடர அனுமதிக்கிறார்கள்.
எனவே - பல முறை நினைவூட்டல், கோரிக்கை மனுக்கள் வழங்கியும் தங்கள் கடமையை செய்யாமல் அலட்சியம் காட்டும் காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட கோரியும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS அவர்களிடம், நேற்று (பிப்ரவரி 19, 2018), நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 20, 2018; 11:00 pm]
[#NEPR/2018022004]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|