காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விரிவான விபரம்:-
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் - ஹிஜ்ரீ 1439ஆம் ஆண்டு வைபவங்களுக்கும், ஓராண்டு நிர்வாகத்திற்குமாக புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம், 13.02.2018. செவ்வாய்க்கிழமையன்று 20.30 மணிக்கு மஜ்லிஸ் ஹல்காவில், அதன் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, இணைச் செயலாளர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் வாசித்தார்.
கடந்தாண்டின் வரவு - செலவு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
நடப்பு 91ஆம் ஆண்டு மஜ்லிஸ் வைபவ
துவக்க நாள் 20.03.2018. செவ்வாய்க்கிழமை என்றும்,
துஆ நாள் (நிறைவு நாள்) 18.04.2018. புதன் கிழமை என்றும்,
நேர்ச்சை நாள் 19.04.2018. வியாழக்கிழமை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம்
துணைத் தலைவர்:
டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத்
மேலாளர் (மேனேஜர்):
மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ
இணைச் செயலாளர்கள்:
(1) கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப்
(2) கே.எம்.செய்யித் அஹ்மத்
(3) ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல்
துணைச் செயலாளர்:
கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத்
வைபவ கமிட்டியினர்:
(1) என்.டீ.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ (தலைவர்)
(2) மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ
(3) மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன்
இவ்வாறாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். |