காயல்பட்டினம் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் காயல் ப்ரீமியர் லீக் (KPL) விளையாட்டுப் போட்டிகள் வரிசையில், நிகழாண்டுப் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளதாகவும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018: இளம் வீரர்களுக்கான கொண்டாட்டம் ஏப்ரல் மாதம் ஆரம்பம்!
கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் மற்றும் கேரம் போட்டிகளில் காயல்பட்டினம் வீரர்களின் திறமையை மெருகேற்றவும், வீரர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவும், வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் கடந்த 10 ஆண்டுகளாக காயல் பிரிமியர் லீக் என்ற பெயரில் போட்டிகளை நடத்தி வருகின்றது.
அதன் வரிசையில் இவ்வாண்டும், கோடைவிடுமுறையை இளம் வீரர்கள் குதூகளத்துடன் கொண்டாட வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் 13 வயதுக்குற்பட்ட வீரர்களுக்கு (சப்ஜூனியர்) பிரத்தியேகமாகவும், 15 வயதுக்குற்பட்ட (ஜூனியர்) வீரர்களுக்கு பிரத்தியேகமாகவும் இரண்டு பிரிவுகளாக கால்பந்து போட்டிகளை இன்ஷாஅல்லாஹ் நடத்தவுள்ளது.
சப்ஜூனியர் போட்டிகளில் பங்கேற்க 2005ஆம் ஆண்டோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களும், ஜூனியர் பிரிவில் பங்கேற்க 2003ஆம் ஆண்டோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்களாம். ஒரு வீரர் ஒரு பிரிவில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்.
இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள வீரர்கள் விண்ணப்பங்களை ஐசிஐசிஐ வங்கி அருகில் அமைந்துள்ள அல்தாஃப் எண்டர்பிரைசஸில் பெற்று, பூர்த்திசெய்து அங்கேயே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் அணிகளுக்கான உரிமையாளர்களும் வரவேற்க்கப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு...
அலி ஃபைஸல் ... 00852 97540095, தஸ்லீம் ... 00852 97431898, ஜவஹர் ... 9840676767, சொளுக்கு முஹம்மது தம்பி ... 9600430657 மற்றும் ஜஹாங்கிர் ... 9171776763.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர் |