சென்னையிலுள்ள மத்ரஸாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது (பட்டச் சான்றிதழ்) பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-
சென்னை - மண்ணடி, அங்கப்பன் தெருவிலுள்ள மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கி வரும் மஆரிஃபுல் ஹுதா திருக்குர்ஆன் மனனப் பயிலகத்தின் (ஹிஃப்ழு மத்ரஸா) பட்டமளிப்பு விழா, 25.02.2018. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில், காயல்பட்டினம்
நெய்னார் தெருவைச் சேர்ந்த எம்.என்.நிஜாமுத்தீன் உடைய மகன் ஹாஃபிழ் முஹம்மத் முபாரக்,
நெய்னார் தெருவைச் சேர்ந்த முஹம்மத் இஸ்மாஈல் பிலாலீ உடைய மகன் ஹாஃபிழ் முத்து செய்யித் அஹ்மத் பிலாலீ,
கொச்சியார் தெருவைச் சேர்ந்த முஹம்மத் நஜீம் உடைய மகன் ஹாஃபிழ் முஹம்மத் முஹ்யித்தீன்,
நெய்னார் தெருவைச் சேர்ந்த கிதுரு முஹம்மத் உடைய மகன் ஹாஃபிழ் ஷேக் ஃபஹ்மீ
ஆகிய 4 மாணவர்கள் உட்பட – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும், இதர சில மாநிலங்களையும் சேர்ந்த மொத்தம் 49 மாணவர்களுக்கு இவ்விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது (பட்டச் சான்றிதழ்) வழங்கப்பட்டது.
சென்னை பூந்தமல்லி காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் வி.எம்.ஹிதாயத்துல்லாஹ் பாக்கவீ தலைமை தாங்கினார். மண்ணடி மஸ்ஜிதுல் அஷ்ரஃப் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஏ.ஸித்தீக் அலீ பாக்கவீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ, பூந்தமல்லி காஷிஃபுல் ஹீதா அரபிக் கல்லூரியின் ஆசிரியர்களான மவ்லவீ அப்துல் மஜீத் பாக்கவீ, மவ்லவீ முஹம்மத் இப்றாஹீம் பாக்கவீ உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.
காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு அமீரே ஷரீஅத்துமான ஷைகுல் ஹதீஸ் மவ்லவீ முஹம்மத் யஃகூப், மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில், ஏராளமான காயலர்கள் உட்பட – இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, பட்டம் பெற்ற மாணவர்களைப் பாராட்டினர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
படங்களுள் உதவி:
முஹம்மத் இஸ்மாஈல் பிலாலீ &
P.M.N.ரியாஸுத்தீன்
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 08:50 / 09.03.2018.]
|