காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர்; ஸூஃபீ ஹழ்ரத் அவர்களின் ஃகலீஃபா; தமிழ்நாடு மாநில அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை தலைவர்; காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் மவ்லவீ எஸ்.எம்.எச்.முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானீ பாக்கவீ, இன்று 09.50 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 76. அன்னார்,
மர்ஹூம் செய்யித் முஹம்மத் ஹம்மாத் அவர்களின் மகனும்,
மர்ஹூம் அப்துல் ஹமீத் அவர்களின் மருமகனாரும்,
மவ்லவீ எம்.ஏ.எஸ்.அபூபக்கர் ஹம்மாத், எம்.ஏ.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோரின் தந்தையும்,
அப்துல் கஃபூர், முஹம்மத் அய்யூப் ஆகியோரின் மாமனாரும்,
ஏ.எச்.முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன், எஸ்.ஏ.கே.எஸ்.முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ஆகியோரது தந்தையரின் தந்தையும்,
நூர் முஹம்மத், முஷ்தாக் அஹ்மத், மீரா ஸாஹிப், எம்.ஏ.முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன், முஹம்மத் அலீ நஜ்முத்தீன், எம்.எம்.எல்.முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன், முர்ஷித், எம்.எம்.எல்.முஷ்ஃபிக் ஹஸன் ஆகியோரது அன்னையரின் தந்தையுமாவார்.
07.03.2018. புதன்கிழமையன்று 11.00 மணிக்கு, காயல்பட்டினம் குத்துக்கல் தெரு ஸூஃபீ மன்ஸிலில் அன்னாரின் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, 11.30 மணியளவில் – காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் & படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 10:35 / 07.03.2018.]
|