காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வெழுதும் மாணவ-மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுத் தேர்ச்சியடைய, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பிரார்த்தனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நாளை (மார்ச் 1) - பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு துவங்கவுள்ளது. ஏப்ரல் 6 வரை நடைபெறவுள்ள இத்தேர்வுகளை - நகரில் சுமார் 600 மாணவ, மாணவியரும், மாநில அளவில் சுமார் 9 லட்ச மாணவ, மாணவியரும் எழுதவுள்ளனர்.
இத்தேர்வுகளை சந்திக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் - எவ்வித பதற்றமும் இல்லாமல், அமைதியாகவும், நிதானமாகவும் தேர்வுகளை எழுதி சிறப்புற தேர்ச்சிபெற - நடப்பது என்ன? குழும அங்கத்தினர் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்.
அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள குறிப்புகள் உள்ளடக்கிய கால அட்டவணை:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 28, 2018; 10:00 pm]
[#NEPR/2018022802]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|