மாற்று குருதிக் கொடையாளிகளை நோயாளியைச் சார்ந்தோரிடம் கேட்கக் கூடாதென அரசு மருததுவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பபப்பட்டுள்ளதாக - காயல்பட்டினம் “நடப்பது என்ன?” குழுமத்திடம் தூத்துக்குடி மாவட்ட நலப்பணிகள் துறை தகவல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஒரு நோயாளிக்கு இரத்த தேவை ஏற்படும் போது - அந்த தேவையை இரத்த வங்கிகள் மூலமே பூர்த்தி செய்யவேண்டும் என இந்தியா அரசாங்கத்தின் இரத்த கொள்கை (NATIONAL BLOOD POLICY) தெரிவிக்கிறது.
இருப்பினும் - ஒரு நோயாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவரின் உறவினர்களிடம் - மாற்று இரத்த கொடையாளிகள் (REPLACEMENT BLOOD DONORS) கேட்கப்படுவது வழமையாக உள்ளது. தேசிய இரத்த கொள்கைக்கு மாற்றமான செயல் இது என்பது மட்டுமன்றி, ஏற்கனவே மனஉளைச்சலில் உள்ள நோயாளியின் உறவினர்களுக்கு கூடுதல் உளைச்சலை ஏற்படுத்தும் செயல் இதுவாகும்.
இந்த வழக்கத்தை கைவிட்டு, மருத்துவமனைகள் - தாமாகவே இரத்த வங்கிகளை துவங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள இரத்த வங்கிகளுடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொள்ளவோ அறிவுறுத்தி - சுற்றறிக்கை வெளியிட, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன? குழுமம் சமீபத்தில் மனு வழங்கியிருந்தது.
அந்த மனுவிற்கு தற்போது பதில் வழங்கியுள்ள தூத்துக்குடி மாவட்ட நலப்பணிகள் துறை இணை இயக்குனர், தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது போன்ற சுற்றறிக்கை - அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் விடப்படவேண்டும் என தொடர்ந்து நடப்பது என்ன? குழுமம் வலியுறுத்தும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 5, 2018; 10:00 am]
[#NEPR/2018030501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|